காங்கிரஸ் திமுக கூட்டணியில் இழுபறி.! வெளியேறுகிறது காங்கிரஸ்..?

By Asianet TamilFirst Published Mar 1, 2021, 6:57 PM IST
Highlights

காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை நிறைவேறியது.vகாங்கிரஸ்க்கு எத்தனை தொகுதிகள் என்ற அறிவிப்புகள் வெளியிடவில்லை. அதற்குள் மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச துவங்கிவிட்டனர்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகுறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை நிறைவேறியது. காங்கிரஸ்க்கு எத்தனை தொகுதிகள் என்ற அறிவிப்புகள் வெளியிடவில்லை. அதற்குள் மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச துவங்கிவிட்டனர்.

காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் கேரளாவின் முன்னால் முதல்வர் உம்மன் சாண்டி, கே.எஸ். அழகிரி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா பங்குபெற்றனர். பேச்சு வார்த்தையின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தது என்று தெரிவித்தார்.

பிரச்சாரங்களின் போது ராகுல் காந்தி எந்தவொரு இடத்திலும் திமுகவின் பெயரையோ அல்லது ஸ்டாலினின் பெயரையோ குறிப்பிடவில்லை.

ராகுல் காந்தி பிரச்சார திட்டத்தில் ஸ்டாலினை சந்திப்பு குறித்து எதுவும் இல்லை. இரண்டாம் முறை தமிழகம் வந்த ராகுல் காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்திக்கவில்லை. இவை, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்டுள்ள விரிசலையே காட்டுகிறது.

காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

திமுக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை நடத்தும் விதமும் அக்கட்சியின் தலைவர்கள் மத்தியில் ஓர் அதிருப்தியை ஏற்படுதியுள்ளது.

பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசை வெகுவாக பாராட்டினார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு விருதுகள் பெற்று குவிப்பதை அவர் சுட்டி காட்டினார்.
 

click me!