ஓபிஎஸை சந்திக்க நேரம் கேட்ட சுதீஷ்... அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்... இபிஎஸுக்கு எதிராக சதியா?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 1, 2021, 6:40 PM IST
Highlights

இரண்டு சந்திப்பின் போதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நடைபெறவிருந்த அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாத வரையில் நந்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்த சிறிய அரசியல் கட்சிகள் கூட ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானதும் குழுக்களை அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டன. திமுக காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

அதிமுகவை பொறுத்தவரை பாமகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணியில் சற்றே இழுபறி நீடித்து வருகிறது. காரணம் அமித் ஷா உடனான பேச்சுவார்த்தையின் போது அவர் 30 தொகுதிகளை பட்டியல் போட்டு கேட்டதாகவும், ஆனால் இபிஎஸ் 21ல் நிற்பதாலும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக கூட்டணியை விட்டு விலக முடிவெடுக்கும் நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே பல சந்தர்பங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தனிந்து போட்டியிட தயார் என பிரேமலதா விஜயகாந்த் பேசியதும் அதிமுக - தேமுதிக இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளான அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரண்டு சந்திப்பின் போதும் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று நடைபெறவிருந்த அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தோடு போதாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க எல்.கே.சுதீஷ் நேரம் கேட்டிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓ.பி.எஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார் என டிடிவி தினகரன் தெரிவித்து வரும் நிலையில், சுதீஷ் - ஓபிஎஸ் இடையிலான சந்திப்பில் ஏதோ ரகசியம் இருக்குமோ என அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. 

click me!