திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் செய்வதை ஏற்க கூடாது. உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2022, 2:14 PM IST
Highlights

ஒரு தம்பதி திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் மட்டும்  செய்துகொள்வதால் அது அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

ஒரு தம்பதி திருமண சடங்குகள் செய்யாமல் வெறுமனே பதிவுத்திருமணம் மட்டும்  செய்துகொள்வதால் அது அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும்  பதிவுத் திருமணத்தில் திருமண வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:  முதல்வரே சொன்னிங்களே செய்தீர்களா.? அண்ணாமலை பல்கலை தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய். சீமான்.

சமீபகாலமாக பதிவுத் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் முறைப்படி தங்களது மத வழக்கப்படி திருமணங்களை தவிர்த்து, வெறுமனே சார்பதிவாளர் அலுவலகத்தில் மாலை மாற்றி திருமணத்தை பதிவு செய்து கொள்கின்றனர். தற்போது இது தொடர்பான வழக்கு ஒன்றில் இதுகுறித்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விஜயகுமார் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். தம்பதியினர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வோர் அதற்கு முன்பாக முறைப்படி திருமண சடங்குகளை செய்து கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்: பட்டியலினம், பழங்குடி பிரிவு இடஒதுக்கீடு திடீர் அதிகரிப்பு: கர்நாடக அரசு அவசரச் சட்டம்

ஒரு தம்பதி முறைப்படி அவர்களது திருமணத்தை அவர்கள் வழக்கப்படியோ அல்லது சம்பிரதாயப்படியோ நடத்தி முடித்த பிறகுதான் அத்திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009 இன் கீழ் பதிவு செய்ய வேண்டும். ஆனால் திருமண சடங்குகள் மேற்கொள்ளாமல், இந்தச் சட்டத்தின் கீழ்  திருமணத்தை பதிவு செய்ய முடியாது, திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்னர் ஒரு தம்பதிக்கு அவர்கள் வழக்கப்படி திருமண சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்ய வேண்டியது பதிவு துறை அதிகாரிகளின் கடமை என நீதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் அவ்வாறு திருமண சடங்குகள் நடைபெற்றதா என்பது எல்லாம் ஆராயாமல் இரு தரப்பினரும் அளிக்கும் திருமண பதிவு விண்ணப்பங்களை மட்டுமே வைத்து வெறுமனே திருமணங்கள் இயந்திரகதியில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அப்படி செய்யக்கூடாது, எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல் ஒரு தம்பதிக்கு திருமண பதிவுச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது என்றால் அது போலி திருமணச்சான்றாகவே கருதப்படும். என நீதிபதி கூறியுள்ளார். 
 

click me!