வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு அடித்து ஊற்றப் போகிறது மழை.. வானிலை அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2021, 12:47 PM IST
Highlights

17-4-2021 முதல் 19-4-2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதாவது 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

  

17-4-2021 முதல் 19-4-2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி 9 சென்டி மீட்டர் மழையும், மஞ்சளாறு (தஞ்சாவூர்) நத்தம் (திண்டுக்கல்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், மதுரை விமான நிலையம் 6 சென்டிமீட்டர் மழையும், சாத்தூர் (விருதுநகர்) காரியாபட்டி (விருதுநகர்)  திருமங்கலம் (மதுரை) பெருந்துறை (ஈரோடு) தல 5 சென்டி மீட்டர் மழையும், எட்டயபுரம் (தூத்துக்குடி) பெரம்பலூர் (விருதுநகர்) தல 4 சென்டிமீட்டர் மழையும், மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி) மானாமதுரை (சிவகங்கை) பெரியாறு (தேனி ) பெனுகொண்டபுரம் கிருஷ்ணகிரி தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 16-4-2021 தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 

click me!