முழு ஊரடங்கு போட வாய்ப்பில்லை.. மாஸ்க் போடுங்கள்.. ஆளுநர் அதிரடி சரவெடி ..

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2021, 12:25 PM IST
Highlights

அங்கு கொரோனா நோய் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 11 ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு மூன்று நாட்களில் 33 ஆயிரத்து 904 பேருக்கு குழந்தை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முழு ஊரடங்கு போட வாய்ப்பில்லை என்றும், முகக்கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை துவக்கி வைத்தார் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களை போலவும் வைரஸ் வேகமெடுத்துள்ளது. அதேபோல தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையிலும் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. 

அங்கு கொரோனா நோய் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 11 ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு மூன்று நாட்களில் 33 ஆயிரத்து 904 பேருக்கு குழந்தை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த முகாம் நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 

100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு, வாகனங்களை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார். இதுவரை முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

click me!