சென்னையில் சுழற்றியடிக்கும் கொரோனா.. குடும்பத்துடன் மதுரைக்கு கிளம்பிய ஸ்டாலின்..

Published : Apr 16, 2021, 11:59 AM IST
சென்னையில் சுழற்றியடிக்கும் கொரோனா.. குடும்பத்துடன் மதுரைக்கு கிளம்பிய ஸ்டாலின்..

சுருக்கம்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் என குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரைக்கு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் என குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரைக்கு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சநிலையை அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து மக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குறிப்பாக தேர்தல் முடிந்த கையோடு  சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று காலை 2 தனி விமானத்தில் மதுரைக்கு குடும்பத்துடன் மதுரை புறப்பட்டு சென்றுள்ளார். 

கடந்த 2 மாதங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபாரீசன் மற்றும் பேர குழந்தைகள் உள்பட 17 பேருடன் 2 தனி விமானத்தில் மதுரைக்கு சென்றார். அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்லலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?