ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை கோரிய வழக்கு.. இன்று பிற்பகல் தீர்ப்பு.

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2021, 11:36 AM IST
Highlights

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்திற்கு தடை விதிக்க கோரி ஜெவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். 

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும்  தடை விதிக்க கோரி  ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை  நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளது.
 

click me!