தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.. கொரோனாவை கட்டுபடுத்துவது குறித்து ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Apr 16, 2021, 11:12 AM IST
Highlights

வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது, இந்நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் என பல்வேறு காரணங்களால் வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது.  

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது, இந்நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் என பல்வேறு காரணங்களால் வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்தது. இந் நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது  அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பெரு நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி அதிகபட்சமாக 6993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாக பதிவாகி இருந்த நிலையில்,  நேற்று ஒரே  நாளில் 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இரவு நேர ஊரடங்கு அல்லது சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல் படுத்துவது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

 

click me!