மீண்டும் ஈ.வெ.ரா. பெரியார் சாலை..! தார்ப்பூசி ஸ்டிக்கர் ஒட்டிய தி.க தொண்டர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 16, 2021, 10:57 AM IST
Highlights

சென்னையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பலகைகளில் ஈ.வெ.ரா.பெரியார் சாலை என்பதற்குப் பதிலாக க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
 
இதற்கும் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாநகராட்சிப் பதிவுகளில் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறையின் பதிவுகளில் ஏன் திமுக ஆட்சியில் மாற்றம் செய்யவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையைல் தார்பூசி க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்பதை அழித்து விட்டனர் பெரியார் தொண்டர்கள். தற்போது அதன் மீது புதிதாக ஈ.வெ.ரா.பெரியார் சாலை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கரை ஓட்டியவர்கள் பெரியார் திராவிடக் கழகத்தின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அரசுத்தரப்பில் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

இந்தப் படத்தை சமூகத்தளங்களில் பரப்பிவரும் நெட்டிசன்கள் “தார் பூசினாத்தான் மாத்துவீங்கன்னா நாங்க பூசிக்கிட்டே இருப்போம்“ என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்தைப் பாருங்களேன். தார் பூசுவதற்கு முன்னாடியே காக்கா தான் முதல்ல க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு மேலே எச்சம் பண்ணியிருக்கும் போலத் தெரியுது.

click me!