பதறியடித்து தேர்தல் ஆணையத்திடம் ஓடிய திமுக நிர்வாகிகள்... வாக்கு எண்ணும் மையங்களில் சந்தேகம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 16, 2021, 12:45 PM IST
Highlights

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரியிடமே திமுக புகார் மனு அளித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் லாரிகள் செல்லும் நிகழ்வுகளால் சர்ச்சை ஏற்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ‘’தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகங்களில் சம்பந்தமில்லாதவர்கள் நுழைகிறார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் போதிய அளவு கழிவறைகள் இருக்கும் நிலையில், மொபைல் கழிவறைகளுக்கு என்ன அவசியம்?  தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது’’ என அவர்கள் தெரிவித்தனர். 

ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்கட்சிகள் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரியிடமே திமுக புகார் மனு அளித்துள்ளது.

click me!