AIADMK: அதிமுகவினர் அறிவாலயத்தில் கால் வைப்பது அவமானம்.. கொதிக்கும் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2022, 5:23 AM IST
Highlights

அடாவடித்தனங்கள், அராஜகங்கள் ஆளுங்கட்சியால் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக நேற்றைய தினம் திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் மாநகராட்சி ஏ.இ-யை தாக்க முற்பட்டுள்ளார். ஒப்பந்ததாரரைத் தாக்கியதோடு அவர்கள் கொண்டு வந்த தார் கலவை இயந்திரங்களையும் தூக்கி வீசியுள்ளார். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் மகத்தான வெற்றியை பரிசளிப்பர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் வியூகங்கள், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் எம்.ஜி.ஆரின் ஆசியோடும், ஜெயலலிதாவின் ஆசியோடும் மகத்தான வெற்றி பெறும். 

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால்தான் கட்சிகளுக்கு லாபம். திமுக அரசு பொதுமக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. திமுக ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. அடாவடித்தனங்கள், அராஜகங்கள் ஆளுங்கட்சியால் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக நேற்றைய தினம் திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் மாநகராட்சி ஏ.இ-யை தாக்க முற்பட்டுள்ளார். ஒப்பந்ததாரரைத் தாக்கியதோடு அவர்கள் கொண்டு வந்த தார் கலவை இயந்திரங்களையும் தூக்கி வீசியுள்ளார். இப்படி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரே சட்டத்தை மீறுவது பத்திரிகை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வந்தபிறகுதான் கே.பி.பி.சங்கர் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். எங்களுடைய கேள்வி, சட்டத்தை மீறிய செயலுக்கு கட்சி பொறுப்பிலிருந்து மட்டும் எடுத்தா போதுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகங்களை எதிர்கொள்வோம். அதிமுகவினர் அறிவாலயத்தில் கால் வைப்பது அவமான செயல். கட்சியை களங்கப்படுத்தும் வேலையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. எப்போது தேர்தல் நடத்தினாலும் திமுக படுதோல்வியை சந்திக்கும். திமுக அரசு கடந்த 8 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதலில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். வடமாநிலங்களில் இருந்து பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

click me!