5 அடிக்கு மேல் மழைநீர் தெங்கியுள்ளதால் மக்கள் படகில் செல்கின்றனர். திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை திமுக அரசு வழங்கவில்லை.
சென்னையில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என திமுக பொய்யான செய்தியை வெளியிட்டு வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் கொளப்பாக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேட்டியளிக்கையில்;- மழைநீர் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. குளம்போல் தேங்கி இன்னும் வடியாமல் உள்ளது. தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என திமுக பொய்யான செய்தியை வெளியிட்டு வருகிறது. சென்னையில் பெய்த மழையால் ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்று பொய் கூறி வருகிறது. நிர்வாக திறனற்ற திமுக அரசு. அரசின் நிர்வாக திறமையின்மையையும், பொய் பரப்பும் செயலையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரவே நேரில் ஆய்வு என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- மழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு..! ஏக்கருக்கு 30ஆயிரம் வழங்கிடுக..! தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை
undefined
5 அடிக்கு மேல் மழைநீர் தெங்கியுள்ளதால் மக்கள் படகில் செல்கின்றனர். திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களைவழங்கவில்லை. அரசு சிறப்பாக செயல்படுவதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக அரசை மக்கள் யாரும் பாராட்டவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. . 10 சதவீத இடஒதுக்கீடு என்பதே காங்கிரஸ் கொண்டுவந்தது தான் என ஜெய்ராம் ரமேஷ் பேட்டி அளித்ததற்கு திமுக என்ன பதில் சொல்லப் போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு 2005-06ம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் தான் முயற்சியே எடுக்கப்பட்டது.
10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் என பெருமை தேடிகொள்கிறார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். செய்வதை எல்லாம் செய்துவிட்டு தற்போது தப்பிப்பதற்காக ஸ்டாலினும், திமுகவினரும் நாடகமாடுகிறார்கள். 10 இடஒதுக்கீடு விவகாத்தில் இருந்து திமுகவும், ஸ்டாலினும் தப்பிக்கவே அனைத்து கட்சி கூட்டம் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு யார் காரணம் என்பத நாட்டு மக்களுக்கே தெரியும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- சிலை கடத்தலில் இபிஎஸ்க்கு தொடர்பு? அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? கொளுத்தி போட்ட புகழேந்தியால் பரபரப்பு..!