
வடகிழக்கு பருவமழைக்கு முன் முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான் பொது மக்கள் பாராட்டிற்கு காரணம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்;- வடகிழக்கு பருவமழைக்கு முன் முதல்வர் எடுத்த தொடர் நடவடிக்கை தான் பொது மக்கள் பாராட்டிற்கு காரணம். இதனால் தான் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம். மழையால் பாதிக்கப்பட்ட 52,751 பேருக்கு 99 முகாம்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. கடலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிவாரண மையத்தில் மட்டும் மக்கள் உள்ளனர்.அதில் 44 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- 122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீர்காழியை சீரழித்த பேய் மழை.. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. நேரலை..!
தமிழ்நாட்டில் மழையால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்படும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000, கான்க்ரீட் கட்டடம் இடிந்ததிருந்தால் ரூ.95,000 நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும். மலைப்பாங்கான பகுதியில் உள்ள கான்கிரீட் வீடு முழுமையாக சேதம் - 1 லட்சத்து 1,900 ரூபாய், பசு, எருமைகள் உயிரிழந்தால் ரூ.30,000, கன்றுக்குட்டி ரூ.16,000, ஆடு, பன்றி ரூ.3,000, கோழி ரூ.100 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- மழையால் விவசாயம் பாதிப்பு..! சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்..!-ராமதாஸ்
முதல்வர் பார்வையிட்டு வந்த பிறகு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டிய பணிகளைச் செய்ய உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- 122 ஆண்டுகளில் இல்லாத கனமழை! எங்கு பார்த்தாலும் வெள்ளம்! விவசாயிகள் கலங்கி போய் இருக்காங்க! கதறும் வேல்முருகன்