மழையால் விவசாயம் பாதிப்பு..! சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்..!-ராமதாஸ்

Published : Nov 14, 2022, 12:20 PM IST
மழையால் விவசாயம் பாதிப்பு..! சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்..!-ராமதாஸ்

சுருக்கம்

வட கிழக்கு பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   

காப்பீடு காலம் நிறைவு.?

தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சம்பா பயிர்க்காப்பீடுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக  தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல! தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் பணிகள் இப்போது தான் தீவிரம் அடைந்து வருகின்றன.  பருவமழை காரணமாக  பல இடங்களில் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சம்பா நடவுப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே  காப்பீட்டுக்காக  அவகாசத்தை முடித்துக் கொள்வது சமவாய்ப்பு ஆகாது!

சீர்காழியில் வரலாறு காணாத மழையால் விவசாயிகள் பாதிப்பு..! ஹெக்டேருக்கு 75ஆயிரம் வழங்கிடுக..! ஓபிஎஸ்


காலக்கெடு நீடிக்க வேண்டும்

காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40%க்கும் குறைவான விவசாயிகள் மட்டும் தான் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கால அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால் 60%க்கும் கூடுதலான விவ்சாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மறுக்கப்படும். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்! வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை  இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

122 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிக கனமழை..! ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் தவிக்கும் சீர்காழி மக்கள்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!