கொலையாளிகள் விடுதலை நல்லதல்ல! ராஜீவ் கொலையாளிக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா- கே எஸ்.அழகிரி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Nov 14, 2022, 11:12 AM IST

ராஜிவ் கொலையாளிகள் வெளியே விடுவது தவறானது என தெரிவித்த காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 


நேருவிற்கு மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 ஆண்டு  பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவபடத்திற்கு ஆளுனர் ஆர் என் ரவி  இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ,  மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் , சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான்,இலங்கை,ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு இந்தியா வந்திருக்கும் என தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !

 

கொலையாளி விடுதலை நல்லதல்ல

நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார்மயம் செய்கிறார்கள். ஒருவர் உருவாக்கினார் ஒருவர் விற்கிறார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை பாஜக சிதைக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம் இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம் என கூறினார். ராஜிவ் கொலையாளிகள் வெளியே விடுவது தவறானது என தெரிவித்தவர், 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ? என கேள்வி எழுப்பினார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் ஏராளமானோர் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.  இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா ?ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லது அல்ல என தெரிவித்தார்.

31 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை..! 15 மணி நேரம் நாற்காலியில் அமரவைத்து கொடுமை- சீமான் ஆவேசம்

கூட்டணி வேறு, கொள்கை வேறு

ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை திமுக வரவேற்றுள்ளது தொடர்பான கருத்துக்கு பதில் அளித்தவர்,  கூட்டணி வேறு கொள்கை வேறு, காங்கிரஸ் திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால்  மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம் என்றார் கூறினார். சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய கோரி திமுக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திவீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

கவர்னர் ஜெனரலாக நடந்துகொள்ளும் ஆளுநர்கள்..! 6 பேர் விடுதலையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்
 

click me!