துணை ஜனாதிபதி பதவிக்கு முயன்ற கிரண்பேடி..! தூக்கி எரிந்த அமித்ஷா.! அடுத்து ஆர்.என்.ரவி- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

Published : Nov 14, 2022, 01:08 PM IST
துணை ஜனாதிபதி பதவிக்கு முயன்ற கிரண்பேடி..! தூக்கி எரிந்த அமித்ஷா.! அடுத்து ஆர்.என்.ரவி- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

சுருக்கம்

துணை ஜனாதிபதி ஆகலாம் என நினைத்து செயல்பட்ட கிரண்பேடியை தூக்கி எரிந்தது போன்று ஆர்.என்.ரவி மோடி மற்றும் அமீத்ஷாவால் தூக்கி எரியப்படுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

ஆர் என் ரவி தூக்கி எரியப்படுவார்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் சிறப்பு மாநாடு கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது, இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட பல்வேறு புதுச்சேரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை ஆளுநர் மாளிகை தமிழக பா.ஜ.க அலுவலகமாக செயல்படுகிறது என்றும் துணை ஜனபாதி ஆகலாம் என கிரன்பேடி செயல்பட்டார்,  ஆனால் அவர்  வேலை முடிந்த உடன் கிள்ளுக்கீரை போல் அவர் மோடி மற்றும் அமித்ஷாவால் தூக்கி விசப்பட்டார்  தற்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார், இதே நிலைமை தான் நாளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மற்றும் கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோருக்கு ஏற்ப்படும் என தெரிவித்தார்.

கவர்னர் ஜெனரலாக நடந்துகொள்ளும் ஆளுநர்கள்..! 6 பேர் விடுதலையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்

புதிய கல்வி கொள்கை- பாஜக பாசிசம்

இதைத்தொடர்ந்து பேசிய.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, பா.ஜ.க ஆட்சியில் உள்ள இடங்களில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை இதற்கு உதாரனம் உத்திர பிரதேசம் மாநிலம் என தெரிவித்தார். மொழி பிரச்சினையில் இந்தி தான் வேண்டும் என மத்திய அரசும், தாய் மொழி தான் வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது, இதுவே இரட்டை ரயில் என்ஜினுக்கு உதாரணம் என குறிப்பிட்டார். பள்ளி கல்வி என்பது மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டது, எந்த மாநில அரசாங்கத்தையும் கலந்து ஆலோசிக்காமல் புதிய கல்வி கொள்கையை பா.ஜ.க அரசு அமல்படுத்த உள்ளதாக குற்றம்சாட்டினார். இது பாஜகவின் பாசிசத்தை காட்டுகிறது, புதிய கல்வி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தடுத்து நிறுத்தும் என உறுதிபட சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

122 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த மிக கனமழை..! ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் தவிக்கும் சீர்காழி மக்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!