சென்னை வந்த பிரதமர் மோடியிடம் தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்கு முன்னாள் தங்கள் பார்க்க் வந்ததாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பிரதமர் மோடியிடம் பாஜக நிர்வாகி பொய் சொன்னதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
மோடியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்
பிரதமர் மோடி கடந்த வாரம் கல்பாக்கத்தில் நடைபெற்ற அணுஉலை திட்ட தொடக்க விழாவில் பங்கேற்கவும். சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தாமரை மாநாட்டில் பங்கேற்கவும் சென்னை வந்தார். அப்போது அவரை வரவேற்க அரசு அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது அனைவரின் வரவேற்பையும் பெற்ற பிரதமர் மோடி, ஒருவரிடம் மட்டும் நீண்ட நேரம் பேசினார். மேலும் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார். இதனையடுத்து இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திப்பு!
சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான திரு அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை… pic.twitter.com/bufqjbe9wo
மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திப்பு! சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான திரு அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார்.
யார் இந்த அஸ்வந்த் பிஜய்
இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன். நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து யார் இந்த அஸ்வந்த் பிஜய் என பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அஸ்வந்த் பிஜய் தனியார் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். என தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் வேளச்சேரியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியிடம் கூறியது போல் அஸ்வந்த் பிஜய்க்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லையென்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கே விபூதி அடித்த அஸ்வந்த் பிஜய்
பிரதமர் மோடியிடம் நன் மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக பொய் சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரதமரிடம் சொன்னதை வேறு யாரும் கேட்கமாட்டார்கள், யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியே இந்த நிகழ்வை தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டதால் அஸ்வந்த் பிஜய் மாட்டிக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து தனது முகநூல், எக்ஸ் தளம் மற்றும் செல்போனை ஆப்செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். பிரதமரிடம் சீன் போடுவதற்காக தமிழக பாஜக நிர்வாகி அஸ்வந்த் பிஜய் செய்த செயலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடிக்கே அஸ்வந்த் பிஜய் விபூதி அடித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பிரதமரிடம் பொய் சொன்ன அஸ்வந்த் பிஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்.. திமுகவை பங்கம் செய்து குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்.!