தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா.. திருடனுக்குத் தேள் கொட்டியது போல் அமைதியாக வேடிக்கை பார்க்கும் திமுக- அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Mar 12, 2024, 8:40 AM IST
Highlights

இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அண்ணாமலை தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

பெங்களூரில் தண்ணீர் பஞ்சம்

பெங்களூரில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தண்ணீரை வீணாக செலவு செய்தால் 5ஆயிரம் ரூபாய் அபராதம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தமிழகத்தை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார், இனி காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்.

Latest Videos

தண்ணீர் பஞ்சம் - காங்கிரஸ் காரணம்

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.

இந்தி கூட்டணி நலன்

இதனைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இந்தி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக.  இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டம் அமல்.. வரலாற்று பிழையை செய்துட்டாங்க- பாஜகவிற்கு எதிராக சீறும் எடப்பாடி

click me!