கோவையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையைத் தொடர்ந்து சில அலுவலகங்களின் அறைகள் வருமானவரித்துறையால் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட அலுவலகம் மற்றும் இல்லங்களில் சோதனையை துவங்கி உள்ளனர்.
இதில் கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெக்ஸ்சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் என்ற இந்த கட்டிடத்தில் வருமான வரித்துறை கோவை துணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் பேட்டி
ஏற்கனவே கடந்த மே மாதம் வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது இரண்டாவது முறையாக நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினர் இரண்டு குழுக்களாக 6"க்கும் மேற்பட்டோர் நான்கு துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் பாதுகாவலர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல ராமநாதபுரம் பகுதியில் உள்ள பில்டிங் காண்ட்ராக்டர் அருண் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனி காலையில் டி, காபி தேவையில்லை; பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் - செல்லூர் ராஜூ நக்கல் பதில்
மேலும் ராம் நகர் பகுதியில் உள்ள கிஸ்கால் நிறுவன அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பந்தய சாலையில் உள்ள பிரிக்கால் கட்டிடத்தில் குடியிருந்து வரும் அரவிந்த் என்பவர் வீட்டிலும் சீலை அகற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக நான்கு இடங்களில் சோதனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேலும் சில இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.