கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபடுவது வன்கொடுமை அல்ல..?? மனைவி தொடுத்த வழக்கில் நீதிமன்றம் கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2021, 10:18 AM IST
Highlights

அதே நேரத்தில் அவர் கொடுத்த தீர்ப்பில் 375(2)க்கு விதிவிலக்காக மனைவி 18 வயதிற்கு கீழ் இருந்தாலொழிய அவருடைய திருமணத்திற்கு பிறகு கணவன் வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என கூறினார். 

திருமணத்திற்குப் பின்னர் கணவன் வற்புறுத்தி மனைவியை பாலியல் உறவில் ஈடுபடுவது ஒருபோதும் வன்கொடுமை ஆகாது என சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. இது பலரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சிறுமிகளுக்கு எதிராக பாலியல் சீண்டல், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி இளம் பெண்கள் கற்பழிப்பு செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

அதே நேரத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை, கணவனாலேயே  மனைவிக்கு செ*** டார்ச்சர் என பெண்களுக்கு எதிரான டொமஸ்டிக் வயலன்ஸ் போன்றவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மீது தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தான் சதீஷ்கர் நீதிமன்றம் திருமணத்துக்கு பின்னர் கணவன் ஒரு வற்புறுத்தி உடலுறவு கொள்வது எந்த வகையிலும் வன்கொடுமை ஆகாது என கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தில், பெண் ஒருவர் தனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு ஒன்று தொடுத்தார், அதற்கான விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி என்.கே சந்திர வான்ஷி  அதிரடி கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.அதாவது திருமணத்திற்குப் பின்னர் கணவர் வற்புறுத்தி பாலியல் உறவு உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அவர் கொடுத்த தீர்ப்பில் 375(2)க்கு விதிவிலக்காக மனைவி 18 வயதிற்கு கீழ் இருந்தாலொழிய அவருடைய திருமணத்திற்கு பிறகு கணவன் வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என கூறினார். அதேசமயம் குற்றவாளி ஆதிக்க நோக்கத்துடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் திருப்தியை பெறுவதாக இருந்தால் பிரிவு 377ன் கீழ் சட்டப்படி குற்றச்சாட்டுகள் தவறானது என்று கூற முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதாவது இயற்கைக்கு மாறாக பாலியல் உறவில் ஈடுபடுவது 377 பிரிவின் கீழ் குற்றமாகும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 

click me!