எல்லாத்தையும் சுரண்டி தின்னுட்டு திமுக மேல பழிபோடுறியே வெட்கமா இல்லயா.. எடப்பாடியை டாராக்கிய புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 4:28 PM IST
Highlights

கொஞ்சம் கூட அவருக்கு மனசாட்சி இருக்காதா என கேள்வி எழுப்பினார். தொடர்த்து பேசிய அவர்,  இந்த வெள்ளப் பாதிப்புக்கு முழு காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான், ஆனால் திமுக மீது பழி போடுகிறார். 

சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணமானவர்களை ஜெயிலுக்கு அனுப்பும் வரை ஓயமாட்டேன் என பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். முழுக்க முழுக்க இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று தெரிவித்துள்ள அவர், அவர் தனி ஆளாக மக்களை சந்திக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாகப் பெய்துள்ளது. குறிப்பாக கடந்த 7ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் 10, 11 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழை சென்னையை மூழ்கடித்துவிட்டது என்றே சொல்லலாம், இதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறியது, குறிப்பாக கடந்த ஆட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் மேற்கொள்ளப்பட்ட தி நகர், கோடம்பாக்கம், கே.கே நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த திட்டத்தில் நடந்த ஊழலே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அது தொடர்பாக விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு பாஜக, அதிமுக உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம்  எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் இதில் சம்பந்தமுடையவர்கள் ஜெயிலுக்கு செல்லும் வரை தான் ஓயப்போவதில்லை என்றும் பெங்களூரு புகழேந்தி காட்டமாக கூறியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் ஒரு வீட்டிற்குள் செல்ல முடியாது தமிழகமாக மாறியுள்ளது அந்த அளவுக்கு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளது சென்னை. ஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கோயபல்ஸ்சையே விஞ்சக் கூடியவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மிக அருமையாக செய்திருக்கிறோம், 954 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் திட்டத்தை செய்து சாதனை படைத்துள்ளோம், சென்னையில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கி நிற்காது, எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என்றார். 

உண்மையிலேயே  அப்படி அவர்கள் செய்திருந்தால் சென்னை இப்படி வெள்ளக்காடாக மாறியிருக்காது. தொடர் மழை பெய்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி, எந்த சீற்றம் ஏற்பட்டாலும் சரி சென்னையில் தண்ணீர் தேங்காத என கூறினார். இந்த பொய்யை தமிழகம் முழுவதும் கூறி வாக்கு சேகரித்தார். இவரைவிட ஒரு படி மேலே சென்ற அந்த துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டாலும் வெல்லம் பாதிப்பு ஏற்படாது என கூறினார். அந்த அளவுக்கு  உட்கட்டமைப்பை செய்திருக்கிறோம் எனக் கூறினார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், சென்னை மக்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள்.? மழை அதிகமாக பெய்தால் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு சென்னை தள்ளப்படும் என்பதை இவர்கள் காட்டிவிட்டார்கள். கர்ப்பிணி பெண்கள், பள்ளிக்கு செல்ல முடியாத சிறியவர்கள், படிக்கிற மாணவர்கள் எல்லா வீட்டிலும்  தண்ணீர் நுழைந்ததால் எவ்வளவு பெரிய வேதனைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதை நினைக்கவே துயராக இருக்கிறது. ஆனால்  இதற்கெல்லாம் காரணமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை மக்களை சந்திக்க தனியாக செல்ல அஞ்சிக் கொண்டு பபூன் ஜெயகுமார், சென்னை தாதா வளர்மதி என இன்னும் நாற்பது ஐம்பது பேரைத் திரட்டிக்கொண்டு மழை வெள்ளத்தை ஆய்வு செய்கிறேன் வன வலம் வருகிறார்.

கொஞ்சம் கூட அவருக்கு மனசாட்சி இருக்காதா என கேள்வி எழுப்பினார். தொடர்த்து பேசிய அவர்,  இந்த வெள்ளப் பாதிப்புக்கு முழு காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான், ஆனால் திமுக மீது பழி போடுகிறார். கோடிக்கணக்கான பணம் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டு அதில் எந்த பணிகளும் சரியாக செய்யாமல் போனதே இதற்குக் காரணம்.  கடந்த 10 ஆண்டுகளாக அனைத்தையும் சுரண்டிவிட்டு இப்போது திமுக என்ன செய்தது என கேள்வி கேட்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு அசிங்கமாக இல்லையா என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

click me!