மகளீர் அணி தெரியும் அது என்ன ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளர்? தினகரன் போட்ட அதிர்ச்சி பாம்...

By sathish kFirst Published Oct 12, 2018, 5:14 PM IST
Highlights

அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக  இஷிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தினகரனின்  உதவியாளரான ஜனார்தனன் உறவினர் என சொல்லப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐ.டி. விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனின் மனைவி இஷிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அவரை, அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்தார்.

ஜெயா டிவியில் எம்.டி.யாக இருப்பவர்களுக்கு பி.ஏ.வாக இருந்தவர்தான் இந்த ஜனார்த்தனன். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா குடும்பத்துடன் நெருக்கத்துடன் இருந்து வந்தார். அதிலும் தினகரன் குடும்பத்திற்கு விசுவாசியாக மாறினார் இந்த ஜனார்த்தனன்.

அதிமுக ஆட்சி காலத்தின்போது, ஜனார்த்தனை வைத்தே, முக்கிய காரியங்களை பலர் சாதித்துக் கொண்டனர். அதில் முக்கியமானவர்கள் என்றார் பெரும் புள்ளிகள் என்று குறிப்பிடுபவர்கள்தான் அதிகமாம். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிகள் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் தனியாக பிரிந்து சென்றார். இதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், தற்போது அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக ஜனார்த்தனனின் மனைவி இஷிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐடி பிரிவு பொதுச்செயலாளராக நியமித்த கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

அரசியல் கட்சியில் மகளீர் அணி என்று இருக்கிறது தெரியும், அது என்ன ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளர் என தினகரன் போட்ட அதிர்ச்சி பாமை தொண்டர்கள் நொண்டி நொண்டி தேடி வருகின்றனர்.

click me!