அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக இஷிகா நியமனம்!!

By sathish kFirst Published Oct 12, 2018, 1:33 PM IST
Highlights

அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக இஷிகாவை நியமித்துள்ளார். இவர் டிடிவி தினகரன் உதவியாளர் 
ஜனார்த்தன் மனைவி என்பது கூடுதல் தகவல்.

அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக இஷிகாவை நியமித்துள்ளார். இவர் டிடிவி தினகரன் உதவியாளர் 
ஜனார்த்தன் மனைவி என்பது கூடுதல் தகவல்.

ஜெயா டிவியில் எம்.டி.யாக இருப்பவர்களுக்கு பி.ஏ.வாக இருந்தவர் தான் இந்த ஜனா. பின்னர்,  கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா குடும்பத்துடன்  நெருக்கத்துடன் இருந்து வந்துள்ளார்.  

அதிலும் தினகரன்  குடும்பத்திற்கு விசுவாசியாகவும் இருந்து வந்துள்ளார் ஜனா. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜனா மூலமே நிறைய ‘காரியங்களும்' சாதித்துக் கொண்டனர் முக்கிய பெரும் புள்ளிகள்.

இப்படி இருக்கையில், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்திவரும் டிடிவி தினகரன்,  அமமுக ஐடி விங் மாநில மகளிர் பிரிவு செயலாளராக ஜனாவின் மனைவி இஷிகாவை நியமித்துள்ளார். தம்மை மாநில ஐடி பிரிவு பொதுச்செயலாளராக நியமித்த கட்சித் துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 

click me!