கோயம்பேடு மார்க்கெட் திறந்தும் இந்த நிலைமையா..!! விண்ணை முட்டும் காய்கறி விலை..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 3:15 PM IST
Highlights

அதோடு மட்டுமல்லாமல் சில்லறை மொத்த வியாபார கடைகள் திறக்கப்படாததால், சில்லரை வியாபாரிகள் மூட்டை கணக்கிலேயே காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் காய்கறிகளின் விலை கணிசமாக விலை உயர்ந்துள்ளது. தற்காலிகமாக செயல்பட்டு வந்த திருமழிசை காய்கறி சந்தையானது கடந்த செப்டம்பர் இறுதி வாரம் முதல் மீண்டும் கோயம்பேடு சந்தைக்கே மாற்றப்பட்டுள்ளது. இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காய்கறிகளின் விலைப் பட்டியல் நிலவரப்படி, தக்காளி - ரூ.50, உருளைக் கிழங்கு - ரூ.70, சி.வெங்காயம் - ரூ.120, வெங்காயம் - ரூ.70 கத்தரிக்காய் - ரூ.60, பீன்ஸ் - ரூ.80,  அவரைக்காய் - ரூ.80, கேரட் - ரூ.160, முள்ளங்கி - ரூ.60, வெண்டைக்காய் - ரூ.80, முருங்கைக்காய் - ரூ.80, பீட்ரூட் - ரூ.60, பாகற்காய் - ரூ.80, புடலங்காய் - ரூ.40, குடை மிளகாய் - ரூ.30, பச்சை மிளகாய் - ரூ.120, வாழைக்காய் - ரூ.3, சௌசௌ - ரூ.60, இஞ்சி - ரூ.120, - 200 எலுமிச்சை - ரூ.120, காளிபிளவர் - ரூ.60, சேனைக்கிழங்கு - ரூ.60, தேங்காய் - ரூ.30, கோவைக்காய் - ரூ.60, வெள்ளரிக்காய் - ரூ.60 மாங்காய் - ரூ.200 - குண்டு 160  சுரைக்காய் - ரூ.40 பிடி கருணைக்கிழங்கு - ரூ.80 கோயம்பேட்டில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் சில்லறை மொத்த வியாபார கடைகள் திறக்கப்படாததால், சில்லரை வியாபாரிகள் மூட்டை கணக்கிலேயே காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூட்டை கணக்கில் கொள்முதல் செய்வதால் குறுகிய நாட்களில் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும்பாலான காய்கறிகள் அழுகி வீணாக விடுகின்றன. மீதமுள்ள காய்கறிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் அதிக விலை வைத்து விற்க வேண்டியுள்ளது என்கின்றனர் வியாபாரிகள். அதோடு மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழைப்பொழிவு, மற்றும் சுங்க கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு, வண்டி வாடகை உள்ளிட்டவற்றால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் சந்தையில் மக்கள் நடமாட்டமானது குறைந்த அளவிலேயே உள்ளது.

 

click me!