கொரோனாவால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கே இந்த சோதனையா..?? சேகர் ரெட்டி கூறிய அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 3:00 PM IST
Highlights

முதல் சனிக்கிழமை 15 ஆயிரம் பேர், இரண்டாவது சனிக்கிழமை 17ஆயிரம் பேர் வந்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை 25 ஆயிரம் வந்துள்ளனர். நான்காவது சனிக்கிழமைக்கு 25 ஆயிரம் லட்டுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய வழக்கில் தான் தவறு செய்யவில்லை என்றும், தனது வழக்கில் கொஞ்சம் தாமதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். 

சென்னை தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான ஆலயத்தில் 6 வகை நாட்காட்டி மற்றும் இரண்டு வகை நாட்குறிப்பேடுகளின் பக்தர்களுக்கான விற்பனையை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்சேகர் ரெட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த ஆண்டுக்கான 25 ஆயிரம் காலண்டர்கள் வந்துள்ளன. டைரிகள் இன்னும் வரவில்லை. அது ஒரு வாரத்தில் வரும். கடந்த ஆண்டு ஜனவரி முடிந்தும் டைரிகள் வராத பக்தர்கள் அவதியுற்றனர். இந்த முறை அந்த பிரச்சினை வராது. ஏனெனில், இந்த ஆண்டு அக்டோபர் மாதமே காலண்டர்கள் வந்துவிட்டன. 

திருப்பதியில் தினமும் 12,000 முதல் 13,000 வரை 300 ரூபாய் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றனர். ஒரு லட்சம் பேர் முதல் தரிசனம் செய்து வந்த நிலையில் கொரோனா பரவலால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா எப்போது ஒழிந்து, அதற்கான தடுப்பு மருந்து வருகிறதோ அப்போதுதான் தரிசனம் பழயநிலைமைக்கு வரும் என்றர். முதல் சனிக்கிழமை 15 ஆயிரம் பேர், இரண்டாவது சனிக்கிழமை 17ஆயிரம் பேர் வந்திருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை 25 ஆயிரம் வந்துள்ளனர். நான்காவது சனிக்கிழமைக்கு 25 ஆயிரம் லட்டுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தெய்வ பக்தியோடு இருப்பதால்  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய வழக்கில் தான் தவறு செய்யவில்லை. இந்த தீர்ப்பு கொஞ்சம் காலதாமதமாக கொடுத்துள்ளனர் என்றார்.டிக்கெட்டுகள் இல்லாமல் நடைபயணமாக நடந்து செல்பவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்புகின்றனர். எனவே டிக்கெட்டுகள் இல்லாமல் யாரும் மலைக்கு செல்ல வேண்டாம்", என்றார்.

 

click me!