சசிகலா குற்றவாளி.. அவங்க சிறையில் இருந்து வந்தாலும் அரசியல் மாற்றம் இருக்காது.. முத்தரசன் சரவெடி..!

Published : Oct 05, 2020, 02:54 PM IST
சசிகலா குற்றவாளி.. அவங்க சிறையில் இருந்து வந்தாலும் அரசியல் மாற்றம் இருக்காது.. முத்தரசன் சரவெடி..!

சுருக்கம்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் அரசு நிர்வாகம் செயலற்று,  சீர்குலைந்துள்ளது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் அரசு நிர்வாகம் செயலற்று,  சீர்குலைந்துள்ளது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்;- அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து தொடர்ந்து பிரச்சினை உள்ளது. இது உட்கட்சி பிரச்சினைதான். என்றாலும் இவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதால் நிர்வாகம் சீர் குலைந்து நிற்கிறது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அரசியல் மாற்றம் இருக்காது. அவர் ஒரு குற்றவாளி. சொல்லுகிற அளவுக்கு பெரிய செய்தி அல்ல என்றார். மேலும், பேசிய அவர் விவசாய விரோத சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வரும் 12-ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார். 

உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, உடலை காவல் துறையினரே எரிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தலைவர்கள் சந்திப்பது என்பது நாகரிகம், கடமை. காவல் துறை நடந்து கொண்ட விதம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என முத்தரசன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!