தமிழக மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!! அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிகழபோகும் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2020, 1:58 PM IST
Highlights

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதியும், வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழையும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் (6-10-2020) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதியும், வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்சைய்யும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும் பதிவாகும். 

என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் ஏதும் பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.அதேபோல் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடல் உயர் அலை முன்னறிவிப்பு ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

 

click me!