கர்மவீரர் காமராஜர் நினைவிடத்துக்கு இந்த நிலையா..? வருத்தத்தில் ஆழ்ந்துபோன பாஜக தலைவர் அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Oct 2, 2021, 9:03 PM IST
Highlights

கர்மவீரர் காமராஜர் நினைவிடத்திற்கு சென்று இருந்தபோது அவருடைய சமாதியின் நிலையை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காமராஜரின் நினைவு நாளையொட்டி பல்வேறு கட்சிகளும் அவருடைய சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தின. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்துக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் இதுபற்றி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.
அதில், “இன்று கர்மவீரர் காமராஜர் நினைவிடத்திற்கு சென்று இருந்தபோது அவருடைய சமாதியின் நிலையை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் காமராஜரை முற்றிலும் புறக்கணித்துவிட்டன. காமராஜருக்கு இந்த மண்ணின் மைந்தர் உடைய வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் உள்ளடக்கிய காமராஜரின் புகழுக்கும் சிறப்புக்கும் ஏற்ற நினைவிடம் அமைக்க தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். 
துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் காமராஜரின் கொள்கைகளிலிருந்து விலகி விட்டது என்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தம் அளிக்கிறது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

click me!