காலை நிலவரப்படி 11 பேர் மரணம் முடிந்த நிலையில் மருத்துவமனையில் மேலும் ஒருவர் இறந்து போனதால், இறந்தவர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றதால் சாலையின் உயரம் அதிகரித்து விபத்து நடந்ததாக வரும் செய்தியை தவிர்க்க முடியவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கும் நிவாரணம் தேவை
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில், தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தி அறிந்ததும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து அவர்கள் குடும்பத்திற்காக உடனடி நிவாரணமாக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டார். இதேபோல தமிழக அரசும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய நபர்களுக்கும், அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
சாலை உயரம் அதிகரிப்பு
காலை நிலவரப்படி 11 பேர் மரணம் முடிந்த நிலையில் மருத்துவமனையில் மேலும் ஒருவர் இறந்து போனதால், இறந்தவர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன். புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றதால், சாலையின் உயரம் அதிகரித்து விபத்து நேரிட்டதாக வரும் செய்தியை தவிர்க்க முடியவில்லை.
விசாரணை வேண்டும்
அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மக்கள் வாழும் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகளையெல்லாம் மாற்றிவிட்டு, புறநகர் பகுதிக்கு நகர்புற பகுதிக்கு மாற்ற வேண்டும். தொடர்ந்து 93 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழாவை பாரம்பரிய விழா பாதுகாப்புடன் அரசு முழு மரியாதையுடன் கொண்டாடி இருந்திருக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.