தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து எண்ணுவதுதான் டிஜிட்டல் இந்தியா? மோடியை மோசமாக விமர்சித்த சீமான்..!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 11:42 AM IST
Highlights

பணம் கொடுத்ததாக ஒரு வேட்பாளரை பிடித்து 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம். அப்படியானால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஆனால், தேர்தல் ஆணையம் அதையெல்லாம் செய்யாது என சீமான் கூறியுள்ளார். 

பணம் கொடுத்ததாக ஒரு வேட்பாளரை பிடித்து 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம். அப்படியானால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஆனால், தேர்தல் ஆணையம் அதையெல்லாம் செய்யாது என சீமான் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்;- வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகும் சூழல் உள்ளது. அதனால்தான், அந்த முறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதனைக் கண்டுபிடித்த நாடுகளே கைவிட்டுவிட்டன. அதற்கு மைக்ரோசிப் கண்டுபிடித்த ஜப்பானே அதனைப் பயன்படுத்தவில்லை. நைஜீரியாவும், இந்தியாவும்தான் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.

ஜனநாயகத்தில் இது ஒரு கூத்து. தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான். பணப்பட்டுவாடாவை பிடிக்க பறக்கும்படை என்கிறார்கள். அவர்கள் சாலையில் போவோர் வருவோரைத்தான் பிடிக்கிறார்கள். தொகுதிகள் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்தது எல்லோருக்கும் தெரியும். யாரை பிடித்தார்கள். பணம் கொடுத்ததாக ஒரு வேட்பாளரை பிடித்து 10 ஆண்டு தேர்தலில் நிற்க முடியாமல் செய்யுங்கள் பார்ப்போம். அப்படியானால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும். ஆனால், தேர்தல் ஆணையம் அதையெல்லாம் செய்யாது.

கோவையில் பணம் கொடுக்கப்பட்ட வீடுகளின் கதவுகளில் ‘பெய்டு’ என்று எழுதி இருந்தார்கள். எங்கள் கண்களுக்கு தெரிவது தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை. கேடுகெட்ட பண நாயகம் இருக்கும் வரை கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். இந்தியா முழுவதும் 7 கட்டமாக தேர்தலை நடத்துகிறார்கள். ஆனால் ஒரு சிறிய மாநிலமான மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தலாம். டிஜிட்டல் இந்தியா என்று பெருமையாக சொல்கிறீர்கள். அது இதுதானா?

அமெரிக்காவிலேயே ஒரு நாளில் வாக்குப்பதிவு முடித்து முடிவுகளைச் சொல்லிவிடுகின்றனர். எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்? இதெல்லாம் என்ன நடைமுறை? ஏதோ நடக்கிறது. இதில் நாங்களும் போட்டியிடுகிறோம். வாக்களிக்கிறோம். அவ்வளவு தான் என சீமான் கூறியுள்ளார். 

click me!