அமைதியை விரும்பும் பாஜகவில் இப்படி ஒரு நிகழ்வா? நான் முன்னாடியே வந்து இருந்தா தடுத்து இருப்பேன்.. அண்ணாமலை.!

By vinoth kumar  |  First Published Aug 14, 2022, 1:54 PM IST

மதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம். அது தவறு. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதுபோல நடந்தது வருத்தமளிக்கிறது. 


மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜக கட்சியை விட்டு சென்றது அவரது விருப்பம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வர மீனவர்களுடன் படகில் சென்று சுதந்திர தினவிழாவை கொண்டாடினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது விரும்பத்தகாத சம்பவம். அது தவறு. அமைதியை விரும்பும் கட்சியான பாஜகவில் இதுபோல நடந்தது வருத்தமளிக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஓஹோ நாளைக்கு பேசலாம் சொன்னதன் அர்த்தம் இதுதானோ.. 12 மணி நேரத்தில் பாஜக அலறவிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நான் முன்பே விமான நிலையம் வந்திருந்தால் சம்பவத்தை நடக்கவிடாமல் தடுத்திருப்பேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜக கட்சியை விட்டு சென்றது அவரது விருப்பம். கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

இதில், விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிலர் அப்பாவிகள். அவர்கள் மீது வேண்டும் என்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது  என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  பாஜகவை விட்டு விலகுகிறேன்.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த டாக்டர் சரவணன்.. என்ன காரணம் தெரியுமா?

click me!