நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பை கழட்டி வீசிய பெண் இவர்தானா? வெளியான வீடியோ.!

Published : Aug 14, 2022, 01:23 PM ISTUpdated : Aug 14, 2022, 01:29 PM IST
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பை கழட்டி வீசிய பெண் இவர்தானா? வெளியான வீடியோ.!

சுருக்கம்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெண் ஒருவர் கீழே குனிந்து செருப்பை கையில் எடுத்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அதில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் காஷ்மீரில் இருந்து நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த சென்றார். 

அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பெண் ஒருவர் கீழே குனிந்து செருப்பை கையில் எடுத்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் தான் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது வீசினாரா என்ற தகவல் தெரியவில்லை. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி