யார் இந்த டாக்டர் சரவணன்..! எத்தனை கட்சி மாறியுள்ளார் தெரியுமா..? அதிர வைக்கும் பரபரக்கும் தகவல்

By Ajmal Khan  |  First Published Aug 14, 2022, 12:37 PM IST

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருக்கும் டாக்டர் சரவணன், திமுகவில் இணையவேண்டும் என்பதை  நீண்ட நாள் முன்பே எடுத்துவிட்டதாகவும், அதனை தற்போது பயன்படுத்திக்கொண்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
 


சரவணனும் அரசியல் பயணமும்

அரசியல் வாழ்க்கையில் கட்சி மாறுவது சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருவர் தனது அரசியல் பயணத்தில் ஒரே கட்சிக்கு 3 முறை மீண்டும், மீண்டும் சென்றுள்ளார். அப்படிப்பட்ட நிகழ்வு தான் தற்போது அரங்கேறியுள்ளது. காலையில் நிதி அமைச்சர் பிடிஆர் மீது பாய்ந்த டாக்டர் சரவணன், மாலையில் பிடிஆரை சந்தித்து மன்னிப்பு சமாதானம் செய்துள்ளார்.மன்னிப்பு மட்டுமில்லாமல் பாஜகவை விமர்சித்த சரவணன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். அப்படிபட்ட டாக்டர் சரவணன் யார் என்றே தற்போது சமூக வலை தளத்தில் பலரும் தேடி வருகின்றனர். மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணனுடையது தான் தான்.. இந்த மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பணம்  இல்லாமல் இலவச வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மதுரையில் பேமஸ் ஆன சரவணன் தனது அரசியல் பயணத்தை மதிமுகவில் தொடங்கி உள்ளார். 

Tap to resize

Latest Videos

திரைப்படத்தில் கலக்கிய சரவணன்

மதிமுகவில் இருந்த காலத்தில் மதுரை மக்களுக்கு மட்டுமே தெரிந்த சரவணன் தனது அரசியல் பயணத்தை ஜெயிக்க வேண்டும் என்றால் சினிமா துறையிலும் கால் பதிக்க வேண்டும் என நினைத்துள்ளார். அகிலன் என்ற படத்தில்தான் முதல் முறையாக நடிகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் டாக்டர் சரவணன். இப்படத்திற்காக பணத்தை வாரி இறைத்தார். மதுரை நகர் முழுவதும்  இந்தப் படத்தின் கட் அவுட், தட்டி வைத்து கலக்கினார். அப்போது மதிமுகவில் இணைந்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியையும் பெற்றார்.

இதனையடுத்த இரண்டு ஆண்டுகள் மட்டுமே மதிமுகவில் இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் தன்னை பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைத்துக்கொண்டார். அங்கிருந்து சில நாட்களிலேயே மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அப்போது மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சரவணன் ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை, எனவே ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் தொடர்பாக கைரேகை பதிவு செல்லாது புகார் தெரிவித்து அனைவரையும் பரபரப்புக்குள்ளாக்கினார்.

பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு

பாஜகவிற்கு குட்-பை

இதனையடுத்து திருப்பரங்குன்றம், அரவங்குறிச்சி, இடைத்தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்க்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த டாக்டர் சரவணன் பாஜகவில் சேர்ந்தார். இதனையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் உடனடியாக டாக்டர் சரவணனுக்கு வழங்கப்பட்டது.

பாஜகவினர் நுழைந்தது எப்படி..? அந்த செருப்பு பத்திரமாக இருக்கிறது.. புகைப்படத்தை வெளியிட்டு பிடிஆர் ட்வீட்

ஆனால் தேர்தலில் தொல்வி அடைந்தார் டாக்டர் சரவணன், இதனையடுத்து பாஜக தலைமை மதுரை மாவட்ட தலைவராக நியமித்தது. இந்தநிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகவுதாக டாக்டர் சரவணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் சரவணன் தனது அரசியல் பயணத்தில் மதிமுக, பாஜக, திமுக, பாஜக மீண்டும் திமுகவிற்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் அரசியல் விமர்சகர்களோ அரசியலில் இதெல்லாம் சகஜம்ங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை..! காவல்துறை இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது- இபிஎஸ்

 

click me!