அடித்து ஆடும் ஓபிஎஸ்.. திமுக அரசை திக்குமுக்காட வைக்கும் கேள்வி..

Published : Jul 02, 2021, 06:17 PM ISTUpdated : Jul 02, 2021, 06:26 PM IST
அடித்து ஆடும் ஓபிஎஸ்.. திமுக அரசை திக்குமுக்காட வைக்கும் கேள்வி..

சுருக்கம்

 ஐசிஎம்ஆர் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், கொரோனாவால் உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழ்நாடு அரசின் கடமை.  

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ள நிலையில், ஐசிஎம்ஆர் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், கொரோனாவால் உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழ்நாடு அரசின் கடமை. எனவும் அதில் முதலமைச்சர் தலையிட வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டுவதாக தகவல்கள் வந்தபோது, தமிழ்நாடு அரசு எவ்விதமான நிவாரணமும் கொரோனாவால் உயர்ந்த குடும்பங்களுக்கு வழங்காத நிலையில், அதைக் குறைத்துக் காட்ட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று கூறியிருந்தார், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்னர் மாரடைப்பு காரணமாக, அல்லது நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு ஒரு பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா தோற்று இல்லை என்ற முடிவு வந்தால் அவருடைய உயிரிழப்புக்கு காரணம் கொரோனா இல்லை என்று தெரிவித்தார்.

அதேசமயத்தில் ஐ சி எம் ஆர் மருத்துவமனை ஆராய்ச்சி அதிகாரி ஒருவர் கூறிய கருத்தினை நான் இங்கே குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன், அதாவது ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்து இருக்கலாம், ஆனால் அந்த மாரடைப்பிற்கு நுரையீரல் செயலின்மை காரணமாக இருந்து, அந்த நுரையீரல் செயல் இன்மைக்கு காரணம் கொரோனா நோய் தொற்றாக இருந்தால் அந்த உயிரிழப்புக்கு காரணம் கொரோனா என்று தான் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதனை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அதற்குரிய படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் ஒருவருக்கு கொரோனா சிகிச்சை மேற்கொண்டு இருக்கும்போது கொரோனா பரிசோதனை மறுபடியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரை தேசிய சிகிச்சை  கோவிட் வழிகாட்டி நெறிமுறைகளில் இல்லை என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். 

இந்தச் சூழ்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில், புதிய வழிமுறைகளை ஆறு வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நிலைமை உட்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு, இழப்பீட்டு தொகையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம் என்றும், இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ள நிலையில், ஐசிஎம்ஆர் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்வதும், கொரோனாவால் உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் இழப்பீடு சென்றடைவதை கண்காணிப்பதும் தமிழ்நாடு அரசின் கடமை.எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி கொரோனாவால் உயர்ந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஏதேனும் தவறு இருப்பின் அதனை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!