அதிமுகவின் தொண்டன் என சொல்லிக் கொள்வதற்கு ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையானது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில், ‘கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு ஓபிஎஸ் வரலாம்.. இது அண்ணன் - தம்பி சண்டை தாங்க - செல்லூர் ராஜு கொடுத்த சிக்னல்!
மேலும், கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.வி சண்முகம், ‘ஓபிஎஸ் தலைமையில் 300 பேர் கொண்ட ரெளடிகள், சமூக விரோதிகள், குண்டர்களின் துணையோடு, 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயர்ந்த பொருள்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருள்கள் ஓபிஎஸ் வந்த வாகனத்தில், எடுத்து செல்லப்பட்டன. புரட்சி தலைவி ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்தவர்.
மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !
தலைமை கழகத்தில் அவர் அமர்ந்து பணியாற்றிய அந்த அறை பூட்டியது பூட்டிய படியே இருக்கிறது. அந்த கதவை மட்டும் எட்டி எட்டி உதைத்து உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். ஓபிஎஸ் அந்த உடைத்த கதவுக்குள்ளே நுழைந்து உள்ளே சென்று அமர்ந்திருக்கிறார். அவருக்கு எப்படி மனம் வந்தது. இன்னும் அதிமுகவின் தொண்டன் என சொல்லிக் கொள்வதற்கு ஓபிஎஸ்-க்கு வெட்கமாக இல்லையா ? என்று கேள்வி எழுப்பினார்.
காவல்துறையின் முழு ஒத்துழைப்போடும், பாதுகாப்போடும் அத்தனை சம்பவங்களும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தகுதியை ஸ்டாலின் இழந்திருக்கிறார். எங்கே பார்த்தாலும் கலவரம். போதை நாடாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் எந்த ஒரு கட்சியிலும் இவ்வளவு மோசமான சம்பவம் இடம்பெறவில்லை’ என்று கடுமையாக ஓபிஎஸ் தரப்பு மீது குற்றஞ்சாட்டினார் சி.வி சண்முகம்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !