
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலுள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தமிழக சட்டமன்ற குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நாயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, மத்திய அரசு வீட்டு வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. தமிழகத்தில் 22% மின் இழப்பு ஏற்பட்டுள்ளதை இனி வருங்காலங்களில் குறைக்க வேண்டும் மற்றும் மின்சார வாரியத்தின் மீது இருக்கும் கடன்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தான் மத்திய அரசு தெரிவித்துள்ளது என அவர் விளக்கினார்.
மேலும் படிக்க:பிரின்ஸ்பால் ரூமில் ரத்த கரையுடன் காண்டம்.. தாளாளர் மகன்கள் எங்கே? பகீர் கிளப்பும் வி.சி.க. மாவட்ட செயலாளர்
மேலும் சமீபத்தில் தான் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியது. அதிலிருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்ளாக தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதுக்குறித்து விளக்கமளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர், மத்திய அரசு சொன்னதால் தான் கட்டணத்தை உயர்த்தியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசானது எந்த காலகட்டத்திலும் எந்த அரசும் அப்படி சொல்லாது என்று எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது படி , இல்லதரசிகளுக்கு மாதந்தோறு 1000 வழங்கு திட்டம் இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால் மக்களால் வரவேற்கப்பட்ட நல்ல திட்டமான பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டனர் என்று குற்றச்சாட்டினர். எனவே இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு வரும் மக்களவை தேர்தல் முடிந்த பின்பு, மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க:அட கடவுளே.. மேயர் கூட்டத்தில் ”விக்ரம்” படம் பார்த்த அரசு அதிகாரிகள்.. வைரலாகும் புகைப்படம்