பழங்குடி இனத்தவரை அடித்து துவைப்பதுதான் சமூக நீதியா.. திமுகவை திணற திணற அடிக்கும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2022, 5:02 PM IST
Highlights

பழங்குடி இனத்தவரின் பரிதாபநிலை என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

பழங்குடி இனத்தவரின் பரிதாபநிலை என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் பட்டியில் இனத்தின் பழங்குடியினத்தவரான குறும்பர் இன மக்கள் பெரும் கூட்டமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஆதிவாசி களுக்கான எஸ்.டி பிரிவில் ஜாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: Breaking: மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா... இதுதான் காரணமா?

போலீசார் அடக்குமுறையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகள் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார்கள், கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள், குறும்பா குறும்பர், குறும்பன்ஸ், குருமன் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இடப்பெயர்ச்சி செய்யும் இனத்தவரான இவர்களை பழங்குடியின பட்டியல் இனத்தவராக அங்கீகரித்து சாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறும்பர் இனத்தவர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  நபிகள் நாயகத்தை அவமதித்த வழக்கு... நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்!!

11 ஆண்டு காலமாக இவர்கள் பட்டியல் இன பழங்குடி இனத்தவரான சலுகையை பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், சமீபத்தில் இந்த இனத்தின் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்னையும், மத்திய அமைச்சரையும், அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பரிவோடு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பாஜகவின் ஆதரவை தெரிவித்திருந்தோம்.

இவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரும் 8ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டம் வரை இருக்கும் நிலையில், அங்கு இருக்கும் மக்களின் குறைகளை பரிவோடு கேட்காமல் பலப்பிரயோகம் செய்து, பெண்களை குழந்தைகளை தாக்கி தமிழக அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி. அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடி இன மக்களை, அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறல்களை பலபிரயோகத்தை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடியின சமூக மக்கள் படும் இன்னல்களை அறிந்து வேதனையடைந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பழங்குடியினர் சமூகத்தவர்களுக்கு வேண்டிய அனைத்து உரிமைகளையும் கிடைக்க அரசு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஜெய்பீம் திரைப்படம் வெளியானது முதல் ஆங்காங்கே சாதிசான்றிதழ் ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் தவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு எளிய முறையில் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அண்ணாமலை இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!