குடிபோதை முதல் 2வது திருமணம் வரை.. சர்ச்சைகளின் நாயகன் -யார் இந்த பகவந்த் மான்?

Published : Jul 06, 2022, 03:56 PM ISTUpdated : Jul 06, 2022, 04:08 PM IST
குடிபோதை முதல் 2வது திருமணம் வரை.. சர்ச்சைகளின் நாயகன் -யார் இந்த பகவந்த் மான்?

சுருக்கம்

தற்போது பஞ்சாப் முதல்வராக பதவி வகிக்கும் பகவந்த் மான் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான், சங்ருர் மாவட்டத்தில் உள்ள துரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 

இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டியைவிட 58,206 வாக்குகள் அதிகம் பெற்று பகவந்த் மான் வெற்றி பெற்றார். பாஜக, காங்கிரஸ் என முக்கிய கட்சிகளின் வெற்றியை தடுத்து நிறுத்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது பெரும் சாதனையாக கருதப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

யார் இந்த பகவந்த் மான் ?

48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் அரசியல்வாதி என்பதை விட, காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பெரும் புகழடைந்தார் என்பது முக்கியமானதாகும். கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பகவந்த், நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. 

காமெடி நடிகர்

பகவந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார். இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு அவர் காமெடியன் பட்டத்தை துறந்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார். 

தேர்தல் வெற்றியும், தோல்வியும்

இவர் 2011-ல் மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ரா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். அதில் தோல்வியடைந்தார் அவர். பிறகு 2014ல் ஆம் ஆத்மியில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது ஆம் ஆத்மி கட்சி. தனது சொந்த தொகுதியான சங்ரூரில் களம் கண்டார். 

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலிதளத்தின் தலைவரான சுக்தேவ் சிங் திண்ட்சாவை, 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து  அபார வெற்றி பெற்றார்.2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பகவந்த் தோல்வியை தழுவினார். 2017 தேர்தலுக்குப் பிறகு, பகவந்த் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

மதுப்பழக்கம்

பகவந்த் மான் மீது ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக மதுப்பழக்கம் பற்றிய சர்ச்சைகள் நிறையவே உள்ளன. பல முறை குடித்துவிட்டு பொதுவெளியில் அவர் தள்ளாடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. சில ஆண்டுகள் முன் ஆம் ஆத்மியின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து இனி நான் மது அருந்த மாட்டேன். பஞ்சாப் மக்களுக்காக உழைக்க இனி எனது நேரத்தை ஒதுக்குவேன் என்று தனது தாயாரிடம் சத்தியம் செய்தார் பகவந்த்.

முதல் மனைவி விவாகரத்து

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு விஷயங்களை வீடியோ எடுத்த விவகாரம், மனைவியை பிரிந்த விவகாரம் என பகவந்த் மீது சர்ச்சைகள் ஏராளம்.  தனது மனைவி இந்தர்ப்ரீத் கவுரை 2015ல் விவாகரத்து செய்தார்.இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவில் தனது தாயிடம் வசிக்கிறார்கள்.இவர் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் போது மகனும், மகளும் வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாக்டர் குர்ப்ரீத் திருமணம்

அப்போது அவரது முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுர், 'அவர் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் நல்லா இருக்கணும், அவருக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன்' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், இரண்டாவதாக டாக்டர் குர்ப்ரீத் கவுரை நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். சண்டிகரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கு முக்கியமான நபர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது..! தம்பிதுரை மீண்டும் திட்டவட்டம்..!
அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!