தமிழகத்தில் பாஜகதான் எதிர் கட்சியா..? அண்ணாமலையை பங்கம் செய்த செல்லூர் ராஜூ.. பயங்கர எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2021, 12:46 PM IST
Highlights

கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு தற்போது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஆனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிகளுக்கு மட்டும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து அண்ணாமலை பாஜகதான் எதிர்க்கட்சி என கூறி வருகிறார் என முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடைகளில் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதானென்றும், திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என்றும் அண்ணாமலை கூறிவரும் நிலையில் செல்லூர் ராஜூ இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து பாஜக செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவுக்கு என தனித்துவத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதற்காக பிரதமர் மோடி அமித்ஷா முதல்  பாஜகவின் முக்கிய தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பாஜகவுக்கு வட மாநில கட்சி  என்ற தோற்றம் உள்ளதால், அது தமிழ் நாட்டு மக்களுடன் ஒன்றுவதில் சிக்கல் இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அக்காட்சியில் முக்கிய பதவிகளுக்கு வர முடியும் என்ற கருத்தும் இருந்துவந்த நிலையில் தற்போது அது அனைத்தையும் மாற்றும் நடவடிக்கையில் கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. 

இதையும் படியுங்கள்: தமிழக சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றம்.. அதிமுகவை டார் டாராக கிழித்த முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ்.

குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், காவல்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வுபெற்ற அண்ணாமலை ஐபிஎஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் கட்சியில் இடம் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்கியிருக்கிறது.  இந்நிலையில் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆனது முதல், அக்காட்சி இளைஞர்கள், பெண்கள் மத்தியில் எழுச்சியுடனும் விவேகத்துடனும் செயல்பட்டு வருவதை காண முடிகிறது. இதேவேளையில் ஒருபுறம் அதிமுக  பல்வேறு காரணங்களால் தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

எனவே திமுகவுக்கு எதிரான அரசியல் சக்தியாக தன்னை முன்னிறுத்தி கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, அதன் வெளிப்பாடாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதுபோன்ற பிம்பத்தை கட்டமைப்பதற்கான பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் திமுக அமைச்சர்கள் மற்றும்  முதலமைச்சர் குறித்தும், திமுக அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருவதுடன், தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி பாஜகதான் என முழங்கி வருகிறார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். அதாவது மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவரிமான் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சக்தி மாரியம்மன் கோவில் மேற்கூரை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது,  திமுக ஆட்சி வந்த பின்னர் சட்டமன்ற தொகுதிக்கான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதையும் படியுங்கள்: பாஜகவுக்கு பிரச்சனை என்றால் திருமாவளவனுக்கு எவ்வளவு சந்தோஷம்.. கோர்ட் ஆர்டரை கொண்டாடும் விசிக.

கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு தற்போது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ஆனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிகளுக்கு மட்டும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்குவதிலும், திட்டப்பணி மேற்கொள்வதிலும் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார். அப்போது, திமுக அரசின் ஊழலுக்கு எதிராக தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்க்க வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாமலை அவ்வாறு பேசிவருகிறார் என விமர்சித்தார்.

திமுக ஆறு மாத காலம் எவ்வாறு ஆட்சி செய்து வருகிறது என்பதை பார்த்து, எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக, அதற்காக அமைதி காக்கிறோம் என்று அர்த்தமல்ல, மக்களின் எதிர்பார்ப்பை திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்றால் வலுவான போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் என்றார்.
 

click me!