
இரும்புப் பெண்மணியாக போற்றப்படும் இரோம் சர்மிளாவுக்கு அன்னையர் தினமான இன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் சர்மிளா சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை அரசு திரும்பப்பெறக் கோரி உலகின் மிகவும் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பெருமைக்கு உரியவர். மனிப்பூரில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியை தழுவினார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள கோடைக்கானலில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இரோம் சர்மிளாவை தேஸ்மந்த் கொட்டின்கோ கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொடைக்கானலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரோம் சர்மிளாவுக்கு இப்போது 48 வயதாகிறது.