இது எல்லாமே கண்துடைப்புதான்... எடப்பாடியை வறுத்தெடுக்கும் தினகரன்

First Published May 23, 2018, 5:55 PM IST
Highlights
inquiry commission set up by the tn government is just eyewash - dinakaran


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு நபர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது கண்துடைப்பு என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் 100-வது நாளின்போது தூத்துக்குடியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. போலீசாருக்கும்
போராட்டக்கார்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகம்
சூறையாடப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 

போலீசாரின் துப்பாக்கிசூட்டுக்கு நியாயம் கேட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் என சாலை மறியலில் ஈடுபட்டு வந்தன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் முன்பு உறவிகனர்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது அவர்களை போலீசார் கலைந்து
போக கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் போலீஸ் தடியடி
நடைபெற்றது. மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தனர். தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில்
காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி போராட்டம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது குறித்து, அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் பேசும்போது, விசாரணை ஆணையம் கண்துடைப்பானது என்று கூறியுள்ளார். திருச்சியில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு காட்டுமிராண்டித் தனமானது. இது போலீஸ் நடத்திய அராஜகம். மக்களை குருவி சுடுவது போல் சுட்டுத் தள்ளியுள்ளனர். இது தமிழக அரசின் கையாலாகத்தனம். மேலும் இறந்தவர்களுக்கான கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது அமைத்துள்ள விசாரணை ஆணையம் கண்துடைப்பானது என்று கூறினார்.

தூத்துக்குடியில், மு.க.ஸ்டாலின் தூண்டுதலால் வன்முறை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அபத்தமாக பேசுவதே அமைச்சர்களின் வேலையாக உள்ளது. இது முற்றிலும் கோமாளித்தனமான பேச்சு. கூட்டம் கூடுவதைக் கண்காணிக்காமல் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!