“போலீஸ தாக்கினதால டென்ஷன்ல சுட்டுட்டாங்க...” முதல்வரிடம் காரணம் சொன்ன காவல்துறை தலைவர்!

Asianet News Tamil  
Published : May 23, 2018, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
“போலீஸ தாக்கினதால டென்ஷன்ல சுட்டுட்டாங்க...” முதல்வரிடம் காரணம் சொன்ன காவல்துறை தலைவர்!

சுருக்கம்

The police chief told the reason of the chief minister

தடையை மீறி வந்தவர்களைத் தடுத்துப் பார்த்தார்கள். நிற்கவில்லை. கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு எனத் தொடர, பிறகு போலீஸ் மேலே கைவைக்கப் பார்த்ததால் டென்ஷனான நம்ம போலீஸ் வேற வழியில்லாமல் சுடவேண்டியதா போச்சு என காவல் துறை தலைவர் முதல்வர் எடப்பாடியாருக்கு கூலாக பதில் சொன்னாராம்.    

தூத்துக்குடியில் கொடூரமாக நடத்தப்பட்ட  இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை டிவியில பார்த்துதான் தெரிஞ்சிகிட்டாராம் எடப்பாடியாரு. பத்துபேரை காவு வாங்கியதை நேரம் ஆக, ஆகத்தான் ஒன்று, ரெண்டு, மூணுன்னு லிஸ்ட்டு போய்கிட்டே இருந்துச்சாம். இதனால் கடுப்பான எடப்பாடியார். காவல் துறைத் தலைவரை அவசரமாக கூப்பிட்டு என்னன்னு கேட்டாராம்.

அப்போது ‘துப்பாக்கிச் சூடு ஏன்? இதை யாரைக் கேட்டு நடத்தினாங்க? துப்பாக்கி இருக்குன்னு யாரவேனும்னாலும் சுட்டுருவாங்களா? நான்தானே போலீஸ்க்கு அமைச்சர். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும் இல்லையா? சாதாரணமாக வரும் ஊர்வலத்தைக்கூடத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு எப்படி அங்கே போலீஸ் ஸ்ட்ரெங்த் இல்லாமல் போச்சு? ஆரம்பத்துலயே கூட்டத்தை தடுத்து நிறுத்தி கைது செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்கவே மாட்டாங்களே... வரட்டும் பார்க்கலாம்னு விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்களா? இப்படி ஒரு கலவரம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. போலீஸ்தான் எல்லாத்துக்கும் ஒட்டுமொத்த காரணம். ஆனா, உங்களை யாரும் கேட்க மாட்டாங்க. எல்லோரும் என்னைத்தான் கோபமாக பேசுவாங்க. பதவியை ராஜினாமா செய்துட்டு போக சொல்றாங்க என கொந்தளித்தாராம் எடப்படியார். ‘

ஆனால் இதற்க்கு கூலாக பதிலளித்த காவல் துறை தலைவர், ‘இல்ல சார். எனக்குக்கூட அந்த நேரத்துல தகவல் சொல்லல. காரணம், அப்போ சொல்லவே நேரம் இல்லயாம். போராட்டக்காரர்கள் அவ்வளவு ஆக்ரோஷமாக வருவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல. கண்ணீர் புகை வீசியதும் போய்டுவாங்கன்னுதான் நினைச்சு செஞ்சாங்க. ஆனால், அதையெல்லாம் கடந்து கூட்டம் வந்துட்டாங்க. கலெக்டர் ஆபீஸ்க்குள் போய், கலக்ட்டரையே தாக்க உள்ளே போயிட்டாகங்க, அப்படி ஒரு கலவரத்தில் ஈடுபடுவாங்கன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கல. போலீஸாரை அவங்க தாக்க ஆரம்பிச்சுதுலதான் போலீஸ் டென்ஷன் ஆகிட்டாங்க...’ அதான் இப்படி சுட்டுட்டாங்க என்று சொன்னாராம்.

எடப்பாடியோ அந்த விளக்கத்துக்கு சமாதானம் ஆகவே இல்லையாம். ‘அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினபோது எப்படி சென்னைக்கே வர விடாமல் தடுத்தோம். இன்று அப்படி ஒரு போராட்டம் நடக்கும்னு முன்கூட்டியே உங்களுக்கு தெரியாதா? மக்கள் ஒன்று கூடுவதற்கு முன்பே தடுத்திருக்கலாம். இதுல உங்க தோல்வியை ஒப்புகிட்டுதான் ஆகணும். உங்க தோல்வி மட்டுமல்ல எனக்கும் தலைகுனிவு...’ என்று கோபத்துடன் சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார். பதில் சொல்ல முடியாமல் திரும்பிவிட்டாராம் காவல் துறைத் தலைவர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!