
தூத்துக்குடி போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார் எனக் கேட்டு, வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, பார்வேந்தன், காளிமுத்து உள்ளிட்டோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றம் அதனை ஏற்று விசாரித்துள்ளது
மனு கொடுத்த வழக்கறிஞர்கள் தக்க புகைப்படங்களையும் போலீஸ்கார்ர்களின் துப்பாக்கி சூட்டுக்கான ஆதாரம் என பல தரவுகளை கொடுத்து வாதாடினர்.
அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ‘இது மக்களுக்கான அரசு’ எனக் அமைச்சர் ஜெயக்குமார் பாணியில் கூறவும் நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர் ‘நாங்களும் மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம் என கூறியவர்கள், பின் நீங்கள் சுட்ட்தெல்லாம் யார்? என கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின், அவற்றை பதப்படுத்த வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரையில் உடலை பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.