இவர்கள் செயல்பாடு ரொம்ப மோசம்; சட்டுபுட்டுன்னு ஆட்சிய கலைச்சிடுங்க! மோடிக்கு லெட்டர் போட்ட கேப்டன்

First Published May 23, 2018, 4:53 PM IST
Highlights
Vijayakanth wrote a letter to Prime Minister Modi


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதி உள்ளார். மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசு செயல்பட்டு வருவதாகவும் விஜயகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் 100-வது நாளின்போது தூத்துக்குடியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. போலீசாருக்கும்
போராட்டக்கார்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகம்
சூறையாடப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 

போலீசாரின் துப்பாக்கிசூட்டுக்கு நியாயம் கேட்டு, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் என சாலை மறியலில் ஈடுபட்டு வந்தன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையின் முன்பு உறவிகனர்கள் சூழ்ந்திருந்தனர். அப்போது அவர்களை போலீசார் கலைந்து
போக கூறினார்கள். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் போலீஸ் தடியடி
நடைபெற்றது. மேலும் போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தனர். தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க, தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் துணை ராணுவம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவம் அனுப்ப மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கலவர மாவட்டமாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் போர்க்களமாக மாறியுள்ள நிலையில் தமிழக அரசு முற்றிலும் செயலிழந்தாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசை கலைகக பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறி விட்டது. தமிழக அரசு நீடிக்க வேண்டுமா? என ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் விஜயகாந்த்
குறிப்பிட்டுள்ளார்.

click me!