கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எச்.டி.குமாரசாமி! சோனியா, ராகுல், மம்தா பங்கேற்ப்பு...

Asianet News Tamil  
Published : May 23, 2018, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எச்.டி.குமாரசாமி! சோனியா, ராகுல், மம்தா  பங்கேற்ப்பு...

சுருக்கம்

Opposition show of unity at HD Kumaraswamys swearing in ceremony in Bengaluru

கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

கட்சிக்கட்டிலில் அமர நடந்த பல்வேறு போராட்டத்திற்கு பிறகு இன்று தான் கர்நாடகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் யார் என்ற குழப்பத்திற்கு பதில் கிடைத்தது.  

பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டிய நாளில் பெரும்பான்மைமை நிரூபிக்காமலேயே தனது முதல்வர் பதவியை வெறும் 56 மணி நேரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.குமாரசாமி பதவியேற்றார். கர்நாடக துணை முதலமைச்சராக காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரா பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதிவுப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

விவசாயிகள் பெயரில் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகத்தின் முதல்வராக 2-ஆவது முறை பதவியேற்றார். நாளை மறுதினம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அதில் வெற்றி பெற்றவுடன் மற்ற அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்ட பதவிப்பிரமாணம் செய்து கொள்வர். குமாரசாமி பதவியேற்பு விழா இன்று 4.30 மணிக்கு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு வருவதாக இருந்த ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிரா துணை முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மணிக்கு பதவியேற்பு... ஒன்றிணையும் NCP..!
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?