தமிழகத்தை வரிசை கட்டி பழிவாங்கும் மத்திய அரசு... ஒத்தை ஆளாய் அடிச்சு தூக்கும் வைகோ..!

Published : Sep 19, 2019, 04:55 PM ISTUpdated : Sep 19, 2019, 04:56 PM IST
தமிழகத்தை வரிசை கட்டி பழிவாங்கும் மத்திய அரசு... ஒத்தை ஆளாய் அடிச்சு தூக்கும் வைகோ..!

சுருக்கம்

ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வைகோ வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே துறையில், காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது. 62,907 பணியிடங்களுக்கான இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 572 பேரில், 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் பலர் இத்தேர்வில் கலந்துகொண்டபோதும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுநர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல, தற்போதும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதாகத் தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும், என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!