பாகிஸ்தான், சீனாவிற்கு பதிலடி கொடுக்க தயார்..!! அதிநவீன போர் விமானத்தை சொந்தமாக தயாரித்தது இந்தியா..!!

By Asianet TamilFirst Published Sep 19, 2019, 4:20 PM IST
Highlights

 ஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் காற்றை கிழித்து சீறிப்பாய்ந்தது. நம் நாட்டு விமானத்தின் வலிமையை கண்டு  பிரமித்துப்போனேன்  பொருமையடைந்தேன்

முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள தேஜஸ் போர் விமானத்தை இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் முதல் முறையாக இயக்கினார். ஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் விண்ணில் பாய்ந்ததாக பின்னர் மெய்சிலிர்ந்தார் அவர்.

படை வலிமையை அதிகப்படுத்தும் நோக்கில்  இந்திய பாதுகாப்பு துறை ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது, குறிப்பாக விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் அதி தீவிரம்காட்டிவருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான், சீனாவுடன் போர் முண்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறது இந்தியா. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து நீர் மூழ்கி கப்பல்கள், ராணுவ எலிகாப்டர்கள், அளில்லா ரோந்து விமானங்கள் போன்றவற்றை வேகமாக இறக்குமதி செய்து படையில் குவித்து வருகிறது இந்தியா. இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறையின் நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்றான உள்நாட்டிலேயே போர் விமானங்களை உற்பத்தி செய்யும் திட்டம் இன்று நிறைவேறி உள்ளது. 

தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் விமானம் ஒளியின் வேகத்திற்கு நிகரான சுமார் 2,250 கிலோ மீட்டர் வேகத்தில் சீரிப்பாயும் ஆற்றல் கொண்டுள்ளது.  இனி வெளிநாடுகளில் இருந்து விமானங்களை பல ஆயிரம் கோடிகளை கொட்டி செலவழித்து விமானங்களை வாங்க தேவை இல்லை. எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்தில் நம் நாட்டிற்கு ஏற்றார் போல் தயாரித்துக்கொள்ள முடியும் என்ற  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் அதிவேகமாக பறக்கக் கூடிய MIG-21 ரக விமானங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது நம் உள்நாட்டு உற்பத்தியான தேஜஸ் விமானம் படைக்கு கூடுதல் பலமாக இணைந்துள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 120 தேஜஸ் விமானங்களை வாங்க சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில். இந்தியாவே தற்போது இவ்வகை விமானங்களை தயாரித்து வெற்றிகரமாக சோதனையும் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேஜஸ் விமானத்தில் செயல்பாடுகளை குறித்து தெரிந்து கொள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானிகள் உடையில் ஏர் வைஸ் மார்ஷல்  என். திவாரியுடன் இணைந்து விமானத்தை இயக்கினார்.பின்னர் தேஜஸ் குறித்து  தனது சுவாரஸ்யாமன அனுபவத்தை டுவிட்டரில் பகிர்து கொண்டுள்ளார், அதில் இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் அற்புதமானது.  இனி இந்தியாவே சொந்தமாக போர் விமானங்களை தயாரித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தேஜஸ் ஏற்படுத்தியுள்ளது . ஏர் மார்ஷல் தீவாரியின் ஆலோசனையின் விமானத்தை நானாகவே  இயக்கினேன் அப்போது ஒளியின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு தேஜஸ் காற்றை கிழித்து சீறிப்பாய்ந்தது. நம் நாட்டு விமானத்தின் வலிமையை கண்டு  பிரமித்துப்போனேன்  பொருமையடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
 

click me!