சீரழிக்கிற சினிமாவுக்கு கொடுக்குற சலுகையை அத்தியாவசிய பேருந்துக்கு கொடுப்பாரா எடப்பாடியார்?: மிஸ்டர் சிட்டிசனின் நறுக் கேள்வி!

By Vishnu PriyaFirst Published Sep 19, 2019, 3:43 PM IST
Highlights

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றுவதில் அப்படியொன்றும் அவசரம் காட்ட வேண்டாம். வாருங்கள் தெளிவாக விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்! என்று பல கல்வியாளர்களும், அதற்கான அமைப்புகளும் கரையாய் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசோ டெல்லி போட்ட கோட்டினை கடந்து வர மனமில்லாமல், அங்கேயே நின்று அடம் பிடிக்கிறது. 

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றுவதில் அப்படியொன்றும் அவசரம் காட்ட வேண்டாம். வாருங்கள் தெளிவாக விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்! என்று பல கல்வியாளர்களும், அதற்கான அமைப்புகளும் கரையாய் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசோ டெல்லி போட்ட கோட்டினை கடந்து வர மனமில்லாமல், அங்கேயே நின்று அடம் பிடிக்கிறது. 

ஆனால் வெறும் கேளிக்கை அம்சமான சினிமா விஷயத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை, அதிரடி முடிவுகள், விளக்கப் பேட்டிகள் என்று இந்த அரசு போய்க் கொண்டிருப்பதுதான் தலையிலடிக்க வைக்கிறது. 

அதாவது  டாஸ்மாக்கை அரசே எடுத்து நடத்துவது போல, தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் விற்பனையை கண்டும் காணாமல் இருப்பது போல, சினிமா டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் விரைவில் ஒரு இணையதளம் துவங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு தகவலை வெளியிட்டார். ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ‘இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் எடுக்க முடியும். கவுன்ட்டர்  முறையெல்லாம் தியேட்டரில் இனி இருக்காது.’ என்று ஒரு தகவல் பரவியது. 

ஆனால் இது தவறான தகவல் என்று விளக்கம் கொடுக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் “அமைச்சர் சொன்னதை தவறாக புரிந்து விட்டார்கள். அதாவது அரசு பேருந்துகளோடு தனியார் பேருந்துகளும் இயங்குவது போலத்தான் இதுவும். இதுவரையில் சினிமா டிக்கெட்டை தனியார் ஆன்லைன் தளங்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆனால் இனி தமிழக அரசு சார்பாகவும் ஒரு தளம் தொடங்கப்பட முடிவு இருக்கிறது. அதிலும் தாராளமாக புக்கிங் செய்து  கொள்ளலாம். சொல்லப்போனால் சினிமா ரசிகர்களுக்கு இது நல்லதே.” என்று அரசை தாங்கிப் பிடிக்கிறார்.

 

அமைச்சர் கடம்பூர் ராஜூவும் “தனியார் இணையதளங்களில் மட்டும்தான் இதுவரையில் டிக்கெட் புக்கிங் செய்ய முடிகிறது. இதில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக புகார் வருகிறது. அவர்களிடம் சேவைக் கட்டணத்தை (Service Tax) குறைக்கச் சொல்ல இருக்கிறோம். அவர்கள் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால், சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் எடுப்பதற்கு அரசே ஒரு இணையதளத்தை துவங்கும். 

மக்கள் இதில் நியாயமான விலையில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.” என்கிறார். இதையெல்லாம் கவனித்துவிட்டு ஒரு நறுக் கேள்வி கேட்கிறார் மிஸ்டர் பொதுஜனம் “மக்களின் நன்மைக்காக தனி இணையதளத்தை அரசு துவங்குமுன்னு அமைச்சர் சொல்றார். 

தமிழ்நாட்டுல பல ஊர்களில் ஒரு  தூரத்துக்கு அரசு பேருந்து டிக்கெட் விலை, தனியார் பேருந்து டிக்கெட் விலையை விட மிக அதிகமா இருக்குது. உதாரணத்துக்கு ஈரோட்டுல இருந்து கோயமுத்தூருக்கு தனியார் பேருந்து டிக்கெட் விலையை விட, அரசு பேருந்து டிக்கெட் விலை குறைந்தது பதினைந்து ரூபாய் அதிகம். 

முழுக்க முழுக்க தனியாருக்கு நன்மை செய்யும் பொருட்டு எடுக்கப்பட்டதா சொல்லப்படுது இந்த முடிவு. இந்த பிரச்னையை சீர் செய்ய சொல்லி பல வருஷமா மக்கள் குரல் கொடுக்கிறாங்க. அத்தியாவசிய தேவையான பேருந்து கட்டணத்தை சரி செய்ய மனசில்லை, ஆனால் சினிமா டிக்கெட்டை நியாய விலையில் கொடுக்குறாங்களாம். எங்களையெல்லாம் லூஸுன்னு நினைச்சுட்டீங்களா பாஸ்?” என்கிறார்.
 

click me!