பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா பிறந்துவிட்டது.. ஒன்றியம் என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆளுநர் ஆர்.என் ரவி

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2022, 12:43 PM IST
Highlights

இந்தியா என்ற நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டது ஆனால் அது பல மாநிலங்களாக பிரிந்திருந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு தான் என தமிழக அரசு கூறி வரும் நிலையில் நிலையில் ஆர்.என் ரவி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்

.

இந்தியா என்ற நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டது ஆனால் அது பல மாநிலங்களாக பிரிந்திருந்தது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். இந்தியா என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு தான் என தமிழக அரசு கூறி வரும் நிலையில் நிலையில் ஆர்.என் ரவி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது.. லெப்ட் ரைட் வாங்கிய கோர்ட்

சென்னை கலைவாணர் அரங்கில் 5 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் விழா நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஜிஎஸ்டிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த நிறுவனங்களுக்கு ஆளுநர் ரவி பாராட்டி விருதுகளை வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், ஜிஎஸ்டி நாள் என்பது மிகவும் முக்கியமான நாள், சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்ற தினங்கள் எப்படி கொண்டாடப்படுகிறதோ அதேபோல் ஜிஎஸ்டி தினமும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள்.

நம் பாரதம் ஒரு உன்னதமான பாரதம் என்பது நம் அரசியல் அமைப்பிலேயே உள்ளது. கூட்டாட்சி பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்றாலும் இந்திய நாடு மிக நீண்ட வருடங்களுக்கு முன்பே பிறந்து விட்டது, ஆனால் இது பல மாநிலங்களாக பிரிந்திருந்தது. நம் முன்னோர்களிடம் இருந்த பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் வேறுபட்டு இருந்தது, இந்த நாடு ஒரு அகண்ட பாரதம், பாரதம் என்பது ஒன்றுதான், ஆனால் அந்த பாரதத்தில் பல கலாச்சாரங்கள், மொழிகள்தான் அதனுடைய அழகு.

இதையும் படியுங்கள்:  Mahesh Babu : பில்கேட்ஸ் உடன் மகேஷ் பாபு சந்திப்பு... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ

நமது முன்னோர்களான விவேகானந்தர் மகாகவி பாரதியார் பாரதம் குறித்து கூறியுள்ள கருத்துக்களை நாம் கவனிக்க வேண்டும், ஒரே பாரதம் என்கிற வகையில் தான் அவர்களுடைய கரத்துக்கள் இருந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒருங்கிணைத்தாரோ, அதேபோலதான் ஜிஎஸ்டி வரி இந்த நாட்டை ஒருமுகப்படுத்தியிருக்கிறது, இணைத்திருக்கிறது. வியாபாரிகளுக்கும், மக்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது எளிமையாக்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் 35 கோடி முதல் 1500 கோடி வரையில் வருமானம் அதிகரித்துள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா ஒரு பலமான வளமான நாடாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் இந்தியா என்பது பல ஒன்றியங்களில் கூட்டிணைவு எனக்கூறி வருவதுடன்  மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வரும் நிலையில் இந்தியா என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டது ஆனால் அது பல ஒன்றியங்களாக பிரிந்திருந்தது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!