ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க.!

Published : Jul 01, 2022, 09:43 AM ISTUpdated : Jul 01, 2022, 10:05 AM IST
ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க.!

சுருக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்த குடுகுடுப்பை காரர்களை இனி அவருக்கு நல்ல காலம் தான் என கூறியுள்ளனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்த குடுகுடுப்பை காரர்களை இனி அவருக்கு நல்ல காலம் தான் என கூறியுள்ளனர். 

அதிமுக எஃகு கோட்டை என்று கூறிவந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் அக்கட்சியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவாரியான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை கையில் வைத்துள்ள எடப்பாடிக்கு பழனிசாமி இந்த சந்தப்பத்தை தனக்கு சாதததகமாக பயன்படுத்திக்கொண்டு பொதுச்செயலாளராகிவிட வேண்டும் முழு வீச்சில் இறங்கியுள்ளார். ஆனால்,  இரட்டை தலைமையே நீடிக்கவேண்டுமென்றும், ஒற்றைத் தலைமைக்கு அவசியமில்லை என்றும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் முகாமை கரைக்கத் துடிக்கும் இபிஎஸ் தரப்பு.. கொத்து கொத்தாக அணி மாறிய வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!

இந்நிலையில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தனர். அந்த பொதுக்குழுவிலேயே தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.  இதனையடுத்து ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணியினர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

இதனையடுத்து, ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்கு நடைபெறாமல் செய்ய ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் புகார், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர். அதேபோல், எடப்பாடி தரப்பினரிடம் ஓபிஎஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தில் பதிலளித்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், நாளுக்கு நாள் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் ஓபிஎஸ்க்கு இனி நல்ல காலம் என  குடுகுடுப்பை காரர்களை குறி சொல்லியுள்ளனர்.

இதையும் படிங்க;-  ஓபிஎஸ் என் பழைய நண்பர்.. பதவி கொடுத்த பிறகே இபிஎஸ்ஸின் சுயரூபம் தெரிந்தது.. கொட்டித் தீர்த்த டிடிவி தினகரன்!

இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்த குடுகுடுப்பை காரர்களை ஓபிஎஸ்க்கு இனி நல்ல காலம் பிறப்பதாக கூறியுள்ளனர். பின்னர், அவருக்கு ஓபிஎஸ்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!